171 காளைகள் பங்கேற்பு : ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை,மார்ச் 1- புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் அருகே நெய் வாசல் கிராமத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியை கோட் டாட்சியர் பா.ஐஸ்வர்யா, முன்னாள் எம்எல்ஏ இராம.சுப்புராம் ஆகியோர் தொ டங்கி வைத்தனர். திருமயம், காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி, ஆத்தங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளி லிருந்து 171 காளைகள் பங் கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளை களைப் பிடிக்க 38 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப் பட்டனர். மாடுபிடி வீரர், பார்வை யாளர்கள் உள்ளிட்ட 6 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டுத் திடல் அருகே இருந்த மருத்துவக் குழுவி னர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனிடையே ஜல்லிக் கட்டு நிகழ்ச்சி முடிந்தபின், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கண் ணன் மகன் அஜித்குமார் (24), தனது நண்பர்களுடன் போட்டியில் கலந்து கொண்ட மாட்டை வீட்டு க்குப் பிடித்துச் செல்ல முயற்சி செய்தார். அப்போது மாடு குத்தியதில் அஜித் குமாருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. காரைக்குடியி லுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.