tamilnadu

img

மக்களுடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் சந்திப்பு

மயிலாடுதுறை, ஜூலை 21 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 16 ஆவது நாளான ஞாயிறன்றும் போராட்டம் தொடர்ந்தது. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டிஜி.ரவி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இரு வாரங்களை கடந்தும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறு கிற நிலையில், எந்தவொரு அரசு அதிகாரிகளும் நேரில் வந்து சந்திக்க வில்லை. இந்நிலையில் சனிக்கிழமை சீர்காழி கோட்டாட்சியர்  அர்ச்சனா, வட்டாட்சியர் இளங்கோவன் ஆகி யோர் போராட்டக் களத்திற்கு வந்து மக்களை சந்தித்து பேசினர்.