tamilnadu

மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரை

மதுரை, 


மதுரையில் மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடத்த கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சியர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


மதுரையில் சித்திரை திருவிழா நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டிவிஎஸ் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தது அப்போது, கோவில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் கூறியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளார். 


;