tamilnadu

img

தமிழ்நாடு நம்மளோட ‘பேட்ட’! அங்கே நடக்கறது பாஜக ‘தர்பார்’! - கற்பனை: ஜிஜி

நையாண்டி

2020 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் பார்க்க பாஜக ஆளும்  மாநில முதல்வர்கள் 11 பேர் டில்லியில் முகா மிட்டிருந்தனர்.  பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வந்திருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் தங்கள் தலைவர்களை நேரில் சந்திக்கச் சென்றது தங்கள் அதிருப்தியை தெரிவிக்கத்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இந்தக் கூற்றை உறுதி செய்யும் வகை யில் அவர்கள் பிரதமர் வீட்டிலிருந்து தலை யைத் தொங்கப்போட்டுக்கொண்டே வெளியில்  வந்த காட்சி வலைத்தளங்களில் பரவி வைர லாகி வருகிறது. களத்தில் இறங்கி இதுபற்றி  நாம் விசாரித்தபோது பாஜக முதல்வர்கள் 11 பேரும் பிரதமரிடம் இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான மாநில விருதை  தமிழக அதிமுக அரசுக்கு வழங்கியுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்தார்களாம். அதற்கு பிரதமர் ’’நீங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்கா அல்லது புகார் வேட்டு வைப்பதற்கா?’’ என்று கடிந்து கொண்டாராம். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையால்  தன்னுடைய அடுத்த வெளிநாட்டு பயண திட்டம் பாதிப்பிற்குள்ளாகுமோ? என்று அவர்  ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரத்தில்,  முதல்வர்கள் இப்படி  கேட்டதால் மோடி டென்ஷனாகி விட்டதாகவும், இது குறித்து கட்சி யின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவிடம் கேட்டுத் தெளிவுபெறுமாறு கூறி  அனுப்பிவிட்டதாகவும் அத னால்தான் அனைவரும் தலை யைத் தொங்கப் போட்டுக் கொண்டே பிரதமர் இல்லத்தி லிருந்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரதமர்  தங் களை வேண்டு மென்றே அமித்ஷாவிடம் தள்ளிவிட்டதை உணர்ந்த 11 முதல்வர்களும் அவரை பார்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் கிறு கிறுத்துப் போயிருந்த நிலையில், ஒரு வழி யாக என்ன ஆனாலும்  சரி கட்சித் தலைவரை  சந்தித்து இந்த அநியா யத்தை தைரியத் தோடு கேட்டுவிட வேண்டும் என்று முடிவு  செய்துகொண்டு அமித்ஷாவை சந்திப்பதற்கு  போனர்கள். அங்கே அமித்ஷா இவர்கள் வருகையை எதிர்நோக்கி காத்தி ருந்தது போல ’’வாங்க வாங்க. எங்கே அடுத்த புத்தாண்டுக்கு பாத்துக்கலாம்னு வராமயே போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன்.’’ என்று பொடி வைத்து வரவேற்றாராம். இனி பாஜக தலைவர் அமித்ஷாவுடன் 11 பாஜக முதல்வர்கள் நடத்திய உரையாடல்களின் தொகுப்பை உங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்கிறோம்.

‘‘தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கள்.’’ முதல்வர்கள்
‘‘வெறும் புத்தாண்டு வாழ்த்து மட்டும்தானா? வேற எதுவும் இல்லையா?’’ 

அமித்ஷா

‘‘இருக்கு தலை வரே.  நல்லதோ கெட்டதோ அதை உங்ககிட்ட கொட்டித் தீர்த்துடலாம்னு வந்தி ருக்கோம். அதாவது நிர்வாகத் திறன், நீதி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு, பொது உட்கட்டமைப்பு ஆகியவற்றில் நாட்டி லேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக நீங்கள் அதா வது நம்ம மத்திய  அரசு அறிவிச்சி ருக்கறது கொஞ்சம் கூட நல்லா யில்லை, நியாயமுமில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு வழக்கம் போல 2019க்கும் இந்த  இடத்தை கொடுப் பீங்கன்னு நாங்  கல்லாம் எதிர் பார்த்தோம்.’’ இது உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத். ‘‘இதை ஒருவேளை தப்பா கொடுத்தீட்டீங்களோன்னு  எனக்கு டவுட்டா இருக்கு தலைவா. தமிழ்நாட்டுல ஒவ்வொரு நாளும் நாலஞ்சு போராட்டம் நடக்குது. போரட்டம் நடத்தறவங்களை கூப்பிட்டு பேசி பிரச்சனையை தீர்க்காட்டி  இவ்வளவு போராட்டங்கள் ஏன் ஊற்றெ டுக்குது. போராட்டம் நடத்தறதுக்கு அனுமதி கேட்டா காவல்துறை தர்ற மாட்டேங்கறாங்க. ஒவ்வொரு போராட்டத்துக்கும் உயர்நீதி மன்றத்துல கேஸ் போட்டு அனுமதி வாங்க றதை நாம தினம் தினம் டிவியில பாக்கறோம் இதுக்குப் பேர்தான் நிர்வாகத்திறனா?’’ இது கோவா பிரமோத் சாவந்த்.

‘‘அதெல்லாம் கூட பரவாயில்லீங்க தலை வரே. நீதியில தமிழ்நாடு அரசு  முதலிடத்தில இருக்கறதா எந்த பிரகஸ்பதி பட்டியல் தயா ரிச்சார்னு தெரியல. மேலவளவு கொலை வழக்கில தண்டிக்கப்பட்டவர்களை விடு விக்கிறாங்க, பொள்ளாச்சி பாலியல் பயங்க ரத்தில் தொடர்புடைய நபர்கள் குண்டர் சட்டத்தி லிருந்து வெளியில வர்றாங்க. தண்ணீர் கார்ப்ப ரேட்டுகள், மணல் மாஃபியாக்கள்னு நீதிமன்றம்  கண்டிச்ச பிறகும் அவங்க தொழில் கனஜோரா  நடந்துகிட்டிருக்கு. இதுக்கு பேர்தான் நீதி நிர்வாகமா? இதுக்குதான் நல்லாட்சிக்கான விருதா?’’ இது குஜராத் விஜய் ரூபானி ‘‘இதைவிட அபத்தம் ஒன்னு இருக்கு. பொதுமக்கள் பாதுகாப்புல தமிழகத்துக்கு முதலிடம் கொடுத்திருக்கறதை கேட்டு இபிஎஸ்-ஸுக்கும் ஓபிஎஸ்-ஸுக்கும் கூட  அதிர்ச்சியா இருந்திருக்கும். எட்டுவழிச் சாலையை எதிர்க்கிற பொதுமக்களை விவசாயிகளை போலீசை விட்டு அப்புறப்ப டுத்தி அவங்க நிலங்களை பிடுங்கறது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடு கிற பொதுமக்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்து விடறது, ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி போராட்டம் நடத்துற பொது மக்களை சுட்டுத்தள்ளறது எல்லாம் தமிழ் நாட்டுலதான் நடக்குது. இதுக்கு பேர்தான் பொதுமக்கள் பாதுகாப்பாம். அதுக்கு போய் முதலிடமாம். நாடே சிரிக்குது தலைவரே.’’ இமாச்சல் பிரதேஷ் ஜெய்ராம் தாக்கூர்

‘‘இதுக்கு பதிலா குடியுரிமை திருத்தச்  சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம்ல போராட்டம்  நடத்திய மக்கள்கிட்டேயிருந்து தன்னை  தற்காத்துக்க ஹெலிகாப்டர்ல ஏறி தப்பிச்சு சாகஸம் பண்ண நம்ப சர்பானந்த சோனா வாருக்கோ, பிரதமர் மோடியின் குஜராத் ஆட்சியை எத்தனையோ நெருக்கடிகளுக்கு நடுவுல காத்துகிட்டு வர்ற விஜய் ரூபானிக்கோ, இல்ல, எவ்வளவுதான் ஊழல் செய்தாலும் கர்நாடகா முதல்வர் பதவியில இருப்பேன்னு நாட்டுக்கே நிரூபிச்சிக்கிட்டிருக்கற நம்ம எடியூரப்பாவுக்கோ, அதுவும் இல்லாட்டி காத லர் தினம், கம்னாட்டி தினம்னு கொண்டாடு றவங்களையும், பார்ல பீர் சாப்பிட பெண்களை யும் ஓட ஓட விரட்டி இந்து பாரம்பரியத்தை காத்துகிட்டிருக்கிற கோவா பிரமோத் சாவந்துக்கோ நல்லாட்சிக்கான விருதை  கொடுத்திருந்தீங்கன்னா, கடைக்கோடி இந்துவும், பாஜக ஜந்துவும், தெருக்கோடிக்கு வந்தாவது உங்களை வாழ்த்தியிருப்பான்.’’ இது ஹரியானா மனோகர்லால் கத்தார். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு விட்டு அமித்ஷா பேச ஆரம்பித்தார். ‘‘நீங்க  எல்லோரும் பத்திரிகையில வர்ற செய்திகளை மட்டும் வச்சுகிட்டு தமிழ்நாட்டு அரசியலை எடைபோடறீங்க. அதை மட்டும் வச்சு நாம ஒரு அரசு நிர்வாகத்தை எடை போட்டுடக்கூடாது. இன்னிக்கு மத்திய அரசு கொண்டு வர்ற திட்டங்களை நீங்கள்லாம்  நிறைவேற்றலாமா வேணாமான்னு ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கிற நேரத்துல இந்தியாவுலயே கண்மூடித்தனமா நிறைவேத்தற ஒரு அரசு தமிழ்நாட்டு அரசு தான். பாருங்க புதிய கல்விகொள்கை வரைவை  தான் நாம வெளியிட்டோம். அவங்க அதை  அமல் படுத்திட்டாங்க. 3,5,8ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வுன்னு நாட்டுலயே அறி விச்சது அவங்கதான். இந்த வீரம் உங்கள்ல யாருக்காவது இருக்குதா. அதேசமயம் அதுக்கு தமிழ்நாட்டுல எதிர்ப்பு கிளம்பினப்ப 5, 8 வகுப்புகளுக்கு பொது எக்ஸாம் நடக்கும் ஆனா எட்டாம் கிளாஸ் வரைக்கும் எந்த மாண வருக்கும் பாதிப்பு இருக்காதுன்னு சொல்லி சமாளிச்ச மாநில உயர்கல்வி அமைச்சரின் விவேகம் இருக்கே அதுல ஒரு பர்சண்டாவது உங்கள்ல யாருக்காவது உண்டா? பிரதமரின் மாணவர்களுடனான ரேடியோ கலந்துரையாடல் பொங்கல்லீவுல வருதுன்னாலும் அதை பத்தி கவலைப்படாம எல்லா ஸ்கூலுக்கும் சர்க்குலர் அனுப்பற தில்லு அதிமுக அரசுக்கு மட்டும்தான் உண்டு.

அவங்களோட நிர்வாகத்திறனுக்கு இன்னும்கூட சொல்லலாம். தேர்தல் சம யங்கல்ல வார கணக்குல கோட்டையில ஒரு  அமைச்சர்கூட இல்லாம நிர்வாகம் நடக்கறது தமிழ்நாட்டுல மட்டும்தான். எல்லா அமைச்சர்க ளும் தேர்தல் நடக்கற தொகுதிகள்ல டேரா அடிச்சு ஓட்டை கைப்பத்தறதுல எவ்வளவு அக்கறையா செயல்படறாங்கன்னு நீங்க பாத்தீங்கன்னா புரியும் ஏன் தமிழ்நாட்டுக்கு நிர்வாகத் திறன்ல முதலிடம் கிடைச்சிருக்குன்னு. அடுத்ததா நீதியை பத்தி நீங்கள்லாம் சொன்னீங்க அது எடப்பாடி அரசுக்குதான் பொருந்தும். ஒரு பக்கம் பூரண மதுவிலக்கு கொள்கையில் உறுதியா இருக்கறதா சொல்லிகிட்டே மறுபுறம் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தறதுக்கு தேவையான அனைத்தையும் பண்ணிகிட்டிருக்காறே இதுக்கு பேர்தான் (b)சமநீதி. இதுமட்டுமா குட்கா ஊழலை நாமளே மறந்து போகற அளவுக்கு நாம சொல்ற வேலைகளை அதுக்கும் மேலே செய்து திக்குமுக்காட வைக்கிறாங்க தமிழ்நாட்டு அமைச்சருங்க. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தை மூடிபோடாமயே அமுக்கிட்டாங்க பாத்தீங்களா. நான் இவங்ககிட்டே ஊழலைப் பாக்கல, ஊழலுக்கு நடுவுல மாட்டிக்கிட்டாலும் அதை வெளியே வர்றாம இருக்க எவன் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு நிர்வாகம் செய்யற திறமையைப் பாக்கறேன்.

 தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒரு கோடி தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வரும்னு எல்லாம் கெத்தா பேட்டி கொடுக்கறதோடு மட்டுமில்ல அதை நம்பி வேலை வாய்ப்பு அலுவலகத்துல 15 வருஷத்துக்கும் மேல காத்திருக்கிற 88 லட்சம் இளைஞர்களை நம்ப வெச்சிருக்கிற விவேகம் உங்கள்ல யாருக்காவது வருமா. இத்தினிக்கும் தமிழ்நாட்டுல 8 வருஷத்துக்கு மேல தொழில் வாய்ப்புகள் புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படல, இருந்த நிறுவனங்களையும் ஒவ்வொன்னா இழுத்து மூடிட்டு ஓடிக்கிட்டிருக்காங்க. அவங்க ஓடிப்போயிட்டா என்ன நாங்க வெளிநாடு போய் தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு அழைச்சுகிட்டு வர்றோம்னு எத்தனை அமைச்சருக்கு வெளிநாடு போய் அரசாங்க காசுல சுத்திட்டு வந்தாங்க.   இந்த வீரம் உங்கள்ல யாருக்காச்சும் உண்டா? வீரத்துல மட்டுமில்ல விவேகத்துல மட்டுலீல்ல விஸ்வாசத்துலயும் தமிழக அமைச்சர்கள் கிட்டே நீங்க இன்னும் கத்துக்கணும். உங்களுக்கெல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பினா அது என்ன ஏதுன்னு கேள்விமேல கேள்வி கேட்டு எங்களை துளைச்செடுக்கறீங்க. ஆனா தமிழ்நாட்டுக்கு ஒரு வெள்ளை பேப்பர்ல ஒரு முட்டை போட்டு கல்வித்துறை சுற்றறிக்கைன்னு அனுப்பினா அதை என்னன்னு கூட கேக்காம அதை அப்படியே எல்லா ஸ்கூலுக்கும் அனுப்பி சுற்றறிக்கையை தவறாம கடைப்பிடிக்கணும்னு உத்தரவு போட்ருவாங்க. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்துல ஓட்டெடுப்புல இருந்தப்ப நான் அதிமுக அணி எம்.பி.க்களுக்கு ஹேன்ஸ்அப்-னு வாட்ஸ்ஆப் அனுப்பினேன். 11 பேரும் ரெண்டு கைகளையும் தூக்கிட்டாங்க. இந்த விஸ்வாசத்தை என்னன்னு சொல்றது. இப்பகூட  குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க முடியாதுன்னு சொல்ற எல்லா அரசு ஊழியர்களையும் தூக்கி உள்ள வையுங்கன்னு அனுப்பின பேக்ஸ் இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் முதல்ல வெளியாகி இருக்கு. இந்த விஸ்வாசம் உங்கள்ல மட்டுமில்ல நம்ப பாஜக தொண்டன்கிட்டே கூட பாக்க முடியாது. இதுக்குபேருதான் நிர்வாகத்திறன். நீட் விவகாரமா இருக்கட்டும், நோட்டு விவகாரமா இருக்கட்டும், இல்லாட்டி மாட்டு விவகாரமா இருக்கட்டும், பல்லை இளிச்சுகிட்டே நாம சொல்றதை நிறைவேத்தறதும், தமிழ்நாட்டுல கண்டனக்குரல்கள் எழுந்ததும் பல்லுமேல நாக்குபடாம இதையெல்லாம் நாங்களும் எதிர்க்கிறோம்னு அமைச்சர்கள் வாய்கூசாம பொய் பேசறதும்  அடடா... உங்களுக்கெல்லாம் அது சூடுபோட்டாலும் வராது. அதிமுக அமைச்சர்களோட வீரமும், விவேகமும், விஸ்வாசமும் என்னை மெய்சிலிர்க்க வைக்குது. தமிழ்நாட்டுல பாஜகவே ஆட்சியில இருந்தாலும் இப்படி நடக்குமான்னு சந்தேகமா இருக்கு எனக்கு. இதுபோன்ற ஆட்சியைத்தான் நான் உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கறேன். போங்க, போயி இதுமாதிரி நிர்வாகத்தை நடத்தி காட்டுங்க. அடுத்த வருஷமாச்சும் உங்கள்ல யாராவது முதலிடம் வாங்கறீங்களான்னு பாக்கலாம்.’’ என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.

‘‘தலைவரே இப்போதான் எங்களுக்கு எல்லா விஷயமும் புரிஞ்சுது. அடுத்த வருஷம் பாருங்க தமிழ்நாட்டை கீழே தள்ளிட்டு நாங்க எப்படி வர்றோம்னு. தலைவா கேக்றேன்னு தப்பா நெனக்காதீங்க... தல அஜீத்குமார் நம்ம கட்சியில சேர்றாரா என்ன? வார்த்தைக்கு வார்த்தை ‘வீரம்’ங்கறீங்க ‘விவேகம்’ங்கறீங்க ‘விஸ்வாசம்’ங்கறீங்க. இதெல்லாம் அவர் நடிச்ச படங்கள்.’’ என்றார் எடியூரப்பா
அய்யய்யோ அப்படியா இது எனக்கு தெரியாதே. இது  தெரிஞ்சா ரஜினி அவரோட முடிவை அறிவிக்கறதை இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு தள்ளிப்போட்டாலும் போட்டுடுவார் என்று நினைத்துக்கொண்டே, சொன்னார், ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். ஒழுங்கு மரியாதையா போய் இந்துராஷ்டிராவை ஏற்படுத்துற வேலையைப் பாருங்க. தமிழ்நாட்டைப் பத்தி யாராச்சும் குறைசொன்னீங்க பிச்சிபுடுவேன் பிச்சி. தமிழ்நாடு நம்மளோட ‘பேட்ட’, அங்க நடக்கறது பாஜக ‘தர்பார் என்றார் அமித்ஷா. இதனால் அனைத்து முதலமைச்சர்களும் மீண்டும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டே உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இருந்து வெளியேவந்தனர்.

 

;