tamilnadu

img

பாண்லே பால் குளிரூட்டும் நிலையம்: முதல்வர் திறப்பு

புதுச்சேரி,ஜூலை 13- புதுச்சேரியில் பாண்லே பால் குளிரூட்டும் நிலையங்களை முதல்வர்  ரங்கசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

புதுச்சேரி, பாண்லே நிறுவனத்தில் 10 ஆண்டு களுக்கும் மேலாக தினக் கூலி ஊழியர்களாக பணி புரிந்து வரும் புதுச்சேரி யைச் சேர்ந்த 18 ஊழியர் கள் மற்றும் காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தில் (கோலே) பணியாற்றி வந்த 13 தினக்கூலி ஊழியர் களுக்கு பணி நிரந்தர ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த விழாவில்  சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சாய் ெஜ. சரவணன் குமார், திருமுரு கன், அரசு கொறடா  ஆறுமு கம் (எ) ஏ.கே.டி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார்,கூட்டுறவுத்துறை செயலர்  நெடுஞ்செழியன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தைய்யா, பால் வள அபிவிருத்தி அதிகாரி குமரன், பாண்லே  நிர்வாகி ஜோதி ராஜூ  உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஸ்ரீ வேதபுரீஸ்வரர் வரதராஜப் பெருமாள் நகரில் ரூ.1.22 கோடியில் 2950 சதுர அடி பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்ட புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க அலுவலக சொந்த கட்டிடத்தை முதல மைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.