tamilnadu

அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக்கோரி ஆட்சியரிடம் மனு

உதகை, நவ.9- கோத்தகிரி குயின்சோலை ஹட்டி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி குயின் சோலை பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இதன்பின்னர் சாலையை சீரமைக்காததால் தற்போது மிக வும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பாதிப் பிற்குள்ளாகி உள்ளனர். மேலும், தேயிலையை ஏற்றிச்  செல்லும் மினி லாரிகள் மற்றும் உடல் நிலைபாதிக்கப் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு  கொண்டுச் செல்ல 108 ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு மின் இணைப்பு இல்லாததால் எந்த ஒரு சுக, துக்க நிகழ்ச்சிகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், சமுதாய கூடத்தில் போதிய சமையல் அறை இல்லாத நிலையில், சமைப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. சமுதாய கூடத்தை சுற்றிலும் கான்கிரீட் போடப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரக்கோரி பல முறை கோத்தகிரி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் குயின்சோலை ஹட்டி கிராமத்திற்கு சாலை வசதி, சமுதாய கூடத்திற்கு மின் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோத்தகிரி குயின்சோலை ஹட்டி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.