tamilnadu

உதகை: வளைய சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடு

உதகை,டிச.24 - வளைய சூரிய கிரகணத்தை காண்ப தற்கு உதகையில் இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரேடியோ வானியல் மைய விஞ்ஞானி தெரிவித்துள் ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்டம் அருகே முத்தோரையிலுள்ள மத்திய அர சின் ரேடியோ வானியல் மையத்தின் விஞ் ஞானி திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  2019 ஆம் ஆண்டில் உலகில் 5 கிரணங்கள் தென்படும் என்று வானியல் கூர்நோக்கு மையம் தெரி வித்து இருந்தது. அவற்றில் ஜுலை மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஏற்பட்ட பகுதி சந்திர கிரகணம்  மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் மட் டுமே இந்தியாவில் காணமுடியும். இதன் படி வியாழனன்று தமிழகத்தின் சில பகுதி களில் சூரிய கிரகணம் தெளிவாக காண முடியும். அந்த சில பகுதிகளில் உதகையும் ஒன்று. ரேடியோ வானியல் மையம் இந்த வாய்ப்பினை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகி றது. பொதுமக்களிடையே குறிப்பாக மாண வர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்து வதே இதன் நோக்கம் ஆகும். சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக் கப்பட்டு  விளிம்பு பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது ஒரு ஒளிவளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும். இதுவே சூரியனின் கங்கண கிரகணம் அல்லது வளையக்கிரகணம்  அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப் படுகிறது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்கு ஏதுவாக உத கையில் இரண்டு இடங்களில் ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. உதகை அருகேயுள்ள முத்தோரையில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையம் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி விளை யாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் நவீன தொலைநோக்கிகள் மூலம் பார்வை யாளர்களுக்கு விளக்கப்படும். இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒளியியல் தொலைநோக்கியை கொண்டு சூரியனின் திட்டமிட்ட படங்களை பயன் படுத்தி கிரகணத்தை பாதுகாப்பான முறை யில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.சூரிய கிரகணத்தின் முதல் நிகழ்வான பகுதி சூரியன் மறைப்பு காலை 8.05 மணிக்கு தொடங்கும்.அதை தொடர்ந்து 3 நிமிட நேரத்திற்கு வளைய சூரி யன் மறைப்பு சரியாக காலை 9 மணி 26 நிமி டம் 58 நொடிகளில் நிகழும்.மீண்டும் பகுதி சூரியன் மறைப்பு நிகழ்வுடன் 11.09 மணி யளவில் கிரகணம் முடிவடையும்.இதனை காண்பதற்கு அனுமதி இலவசம்.இந்த நிகழ் வுகளை ரேடியோ வானியல் மையம், கக்கோல் மையம் மற்றும் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற் பாடு செய்து உள்ளது என்று கூறியுள்ளார்.