வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...

மயிலாடுதுறை:
மறைந்த தோழர் காவியன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிறன்று நாகையில் நடைபெற்றது.

தீக்கதிர் நாளிதழின் நாகை மாவட்ட செய்தியாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவரும்,மாநிலக்குழு உறுப்பினருமான ந.காவியன் (77) கடந்த 12 அன்று  காலமானார். இறுதி அஞ்சலிக்கு பிறகு திருவாரூர்அரசு மருத்துவமனைக்கு தானமாக அவரது உடல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்து புகழுரையாற்றினார்.தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினரும் மார்க்சிய அறிஞருமான எஸ்.ஏ.பெருமாள், தமுஎகச மாநில பொறுப்பு தலைவரும், தீக்கதிர் ஆசிரியருமான கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், கௌரவ தலைவர் ச.தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீ.மாரிமுத்து, கே.பாலபாரதி, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகைமாலி, மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, தீக்கதிர் திருச்சிபதிப்பு மேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜி.கே நிஜாமுதீன், திரை இயக்குநர் லெனின் பாரதி, அதிமுகநாகை நகர செயலாளர் வழக்கறிஞர் தங்க. கதிரவன் உள்ளிட்ட ஏராமானோர் புகழஞ்சலிசெலுத்தி உரையாற்றினர்.

அப்பாவை பற்றி காவியனின் மகள் கவின் மலரும், இணையரை பற்றி காவியனின் மனைவி நாகை கவின், சகோதரைப் பற்றிகாவியனின் அண்ணனும் உரையாற்றினர். தமுஎகச மாவட்ட துணை செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ட்டி அன்பழகன், நிர்வாகிகள் எல்.பி. சாமி, ராமலிங்கம், உதயகுமார், சத்தியசீலன், து.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நடராஜன் நன்றி கூறினார்.
 

;