tamilnadu

img

கடம்பூர் ஜனார்த்தனம் மறைவு...  

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனம் உடல்நலக்குறைவால் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சனியன்று இரவு 7 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அவரது உடல் அடக்கம் சொந்த ஊரான கடம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடம்பூர் வடக்கு ரத வீதியில் உள்ள அவரது வீட்டில் கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனம் உடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

;