திருவள்ளூர், ஜூன் 2திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நான்கு கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் 700-கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பள்ளி கட்டிடங்கள்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பை கொண்டு வெள்ளையடித்துள்ளனர்.அது சிறிது நாட்களில் காணாமல் போனது. இதனால் பள்ளி கட்டிடங்கள் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வாங்க பள்ளிக்கு போகலாம் என்ற முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழுவினர் பள்ளியின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக பள்ளியின் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் பெயின்ட்டை கொண்டு வண்ணம் பூசியுள்ளனர்.அறிவியல் ஆய்வாகத்திருக்கும் வண்ணம் அடித்தனர், பள்ளியின் பெயர் பலகையையும் புதுப்பித்தனர். வகுப்பறையில் மின்விளக்குகள் மின்விசிறிகளை பழுதுபார்த்தனர். மாணவர்களுக்கான குடிநீருக்கு பழைய ஆழ்துளை கிணற்றை சீரமைத்து மோட்டார் பழுது பார்த்து கொடுத்தனர். அடுத்த கட்டமாக பள்ளியின் முன்புறம் தோட்டம் அமைக்க உள்ளனர் மாணவர்களின் உதவியுடன். பள்ளியின் பாதுகாப்பு கருதி சிசிடீவி கேமரா மற்றும் கேட் பொருத்த உள்ளனர்.ரோட்டரி கிளப் சார்பிலும் இரண்டு கட்டிடங்களுக்கு ரூ.5லட்சம் செலவில் வண்ணம் தீட்டியுள்ளனர்.முன்னாள் மாணவர்களின் தொடர் முயற்றியால் 10, 11, 12-ஆகிய வகுப்புகளில் மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அரசு கைவிட்டாலும் முன்னாள் மாணவர்களின் முயற்சியால் மாணவர்கள் சிறப்பான சூழலில் கல்வி கற்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் கிராம மாணவர்களின் கல்வி தரம் மேலும் உயரும். இது அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.