tamilnadu

img

திவ்யா மெட்ரிக் பள்ளி சாதனை

திருவண்ணாமலை, ஏப்.20-சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில், பள்ளி அளவில் முதல் மதிப் பெண்ணாக 590 பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தப் பள்ளியில் 2019ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் இரண்டு பேர் 550க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 28 பேர் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 45 பேர் 450க்கு மேல் மதிப் பெண் பெற்றள்ளனர். 85 பேர் 400க்கும் மேல் மதிப் பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர் கள் வெற்றியடைய உழைத்த ஆசிரியர்களையும் திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராசன்,துணைத் தலைவர் பிரவீன் குமார் ஆகியோர் பாராட்டினர். சாதனை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி முதன்மை ஒருங்கிணைப்பாளர் பிரதாபன், மெட்ரிக் பள்ளி முதல்வர் முரளி, துணை முதல்வர் சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

;