திருப்பூர், அக். 3- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த முன்னோடி தோழர் கல்கத்தா ஆர்.பெரியசாமி (82) வியாழக்கிழமை கால மானார். தோழர் கல்கத்தா பெரிய சாமி ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் செயல் பட்டு வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பொழுது தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். தீக்கதிர் பத்திரிகையை திருப்பூர் முழுவதும் விநி யோகம் செய்யும் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இப் போதுள்ள பனியன் தொழிலாளர் சங்கத்தின் முன்னோடி சங்கமான அச்சு & பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செய லாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப் பூர் பிரதேச கமிட்டியின் செயலாளராகவும், பல்வேறு பொறுப்புகளை ஏற்று திருப்பூரில் கட்சியை பலமான அமைப்பாக உருவாக்கப் பாடுபட்டார்கடந்த சில வருடங்க ளாக உடல் நலன் பாதிக்கப்பட்ட பொழுதும், தனது 82 ஆவது வயதிலும் தொடர்ந்து கட்சி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண் ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், டி.ஜெயபால் உள்பட கட்சி, தொழிற் சங்கத்தினர் நேரில் அவரது உடலுக்கு மல ரஞ்சலி செலுத்தினர். அவரது கண் தானம் செய்யப்பட்டது. வியாழனன்று இரவு இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.