விஞ்ஞானி ராஜசேகர் தகவல்
திருச்சிராப்பள்ளி, அக்.18- திருச்சி புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி யின் ஆர்டிபெர் அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநகர கிளையும் இணைந்து விஞ்ஞானிகள் உடன் சந்திப்பு எனும் நிகழ்ச்சி வியா ழனன்று நடத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெயராஜ் இலங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். தலை மை ஆசிரியர் ஜோசப் கென் னடி, உதவித் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய தாஸ் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சாந்தி அறிமுக உரையாற்றினார். திருவனந்தபுரம் தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் விஞ்ஞானி ராஜசேகர், இந்திய விண்வெ ளித் திட்டத்தின் வளர்ச்சி, சவால்கள், ராக்கெட் துறை யில் தற்போது உள்ள முன் னேற்றம், விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு பணி கள், எதிர்கால திட்டங்கள், அங்கு அளிக்கப்படும் படிப்பு கள் பற்றி விளக்கினார். விண்வெளிக்கு மனிதர்க ளை அனுப்பும் திட்டம் விரை வில் நடை முறைப்படுத்தப் படும் எனவும், சந்திராயன் இரண்டு திட்டத்தின் பணிகள் பற்றிய ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளது. அவற் றின் குறைகள் சரி செய்யப் பட்டு மீண்டும் ஆய்வுகள் தொ டரும் எனவும் கூறினார். பின்னர் அவர், மாணவர்க ளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னதாக அறிவியல் இயக்க பொறுப்பாசிரியர் ஜான்சன் வரவேற்றார். ஆசிரி யர் ஜேம்ஸ் ஆல்பர்ட் நன்றி கூறினார். விழாவில் 250 மாண வர்கள், அறிவியல் இயக்க மாநகர நிர்வாகிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.