திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

பட்டமளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தாளா ளர் முகம்மதுயூனுஸ் தலைமை வகித்தார். கட்டிட பொறி யியல் துறை பேராசிரியர் சந்தோஷ்குமார் அறிமுக உரை யாற்றினார்.திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ், 63 முது நிலை பொறியியல் மற்றும் 328 இளநிலை பொறியியல் மாணவர்கள் என மொத்தம் 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சிறந்த துறைக்கான நீதிபதி பக்கீர் முகம்மது சுழல் கேடயத்தை கல்லூரி நிறுவன தலைவர் முகம்மது யூனுஸ் இயந்திரவியல் தலைவரிடம் வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் சுசன்கிறிஸ்டினா வரவேற்றார். கணிப் பொறியியல் துறை இணை பேராசிரியர் கீதா நன்றி கூறினார்.

;