செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

அமெரிக்க நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்ற ஏவிசி கல்லூரி மாணவர்கள்

மயிலாடுதுறை, ஏப்.27-மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இரண்டு துறைகளை சேர்ந்த 21 மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.ஏவிசி கல்லூரியின் பிலேஸ்மெண்ட் செல் மூலம் இந்த ஆண்டு கடந்த 24 ஆம் தேதி அமெரிக்க விஸ்டீயான் நிறுவனம் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் பி.எஸ்சி, எம்எஸ்சி எலெட்ரானிக் சயின்ஸ் மற்றும் இயற்பியியல் இறுதியாண்டு பயின்ற பி.பூஜாராணி, டி.திவ்யா, ஆர்.காவியா, எஸ்.பி.பிரசன்னா, என்.விஜய பிரபாகரன், பி.ராஜராஜேஸ்வரி, கே.ஜெயஸ்ரீ, ஆர்.இந்திரபிரியா, என்.சயிலஜா, ஜி.கமலி, ஏ.அனுசியா, கே.யோகபிரியா, எம்.ஐஸ்வர்யா, ஏ.அனுபிரியா, ஜே.பார்கவி, ஜி.பார்வதி, எம்.அருண்பிரகாஷ், எஸ்.சிவகணேஷ், பி.மணிகண்டன், டி.சூர்யா, கே.பரமேஸ்வரி ஆகிய 21 மாணவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றள்ளனர். பணி வாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களை கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு தலைவர் டாக்டர் என்.விஜயரங்கன், செயலர் கே.கார்த்திகேயன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர்.நாகராஜன், பிலேஸ்மெண்ட் செல் ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

;