தஞ்சாவூர் அக்.24- தெலுங்கானாவில் போராடி வரும் அம்மாநில போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி தலைமை வகித்தார். வடக்கு வட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் விளக்கிப் பேசினார். முன்னாள் மாநிலச் செய லாளர் இரா.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்டப் பொருளாளர் கு.பாஸ்க ரன் நன்றி கூறினார். இதில், “உரிமைக்காக போராட் டம் நடத்தியதால் தெலுங்கானா அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் போக்குவரத்து ஊழி யர்கள் மீதான பணி நீக்கத்தை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். போராடி வரும் தொழிற்சங்க தலை வர்களை உடனடியாக அழைத்துப் பேசி, கோரிக்கைகளை அம்மாநில அரசு நிறைவேற்றித் தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. வரு வாய்த் துறை உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.