tamilnadu

img

ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க கருத்தரங்குகள்

தஞ்சாவூர், நவ.19- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் தஞ்சை மாவட்டம் சார்பில் மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த தின, மத நல்லிணக்க கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமையன்று பெசண்ட் அரங்க புதிய கட்டிடத் தில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் ஆர்.கலியமூர்த்தி கருத்த ரங்கிற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.இராஜ கோபாலன் வரவேற்றார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் வெ. ஜீவகுமார், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கோதண்டபாணி ஆகியோர் கருத்துரையாற்றினர். ஓய்வூதி யர் சங்க மாநிலச் செயலாளர் பி. ஜீவானந்தம் சிறப்புரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் ஜி.பூபதி நன்றி கூறினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தா னந்தன், மாவட்ட நிர்வாகி கள் தமிழ்மணி, அன்புமணி, சமு தாக்கனி, தெட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், தமிழ்செல் வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை 
இதே போல் மத நல்லிணக்க கருத்தரங்கம் திங்கள்கிழமை யன்று புதுக்கோட்டையில் நடை பெற்றது. புதுக்கோட்டை வரு வாய்த்ய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.ஆழ்வாரப்பன் மற்றும் நிர்வாகிகள் என்.ராமச் சந்திரன், ஆர்.முருகேசன், ஆர். ராஜேந்திரசிங், ஆர்.சுப்பிரமணி யன், அ.மணவாளன் உள்ளிட் டோர் கருத்துரை வழங்கினார்.  ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் அர்.ரெங்கசாமி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்த ரங்கில் ஏராளமான ஓய்வூதி யர்கள் பங்கேற்றனர்.