tamilnadu

தோழர் ராஜப்பா நினைவு தினம்

தஞ்சாவூர், செப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் நந்தனவனப்பட்டியில் மறைந்த தோழர் ஏ.ராஜப்பா 12-ஆவது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் தோழர் ஏ.ராஜப்பா. நினைவு தினத்தன்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ப்பட்டது. தொடர்ந்து கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோலை.ரமேஷ், கே.ராஜகோபால், விஜ யகுமார், ஏ.வைத்தியநாதசாமி, கிளைச் செயலாளர் வடிவழகன், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.