ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இயல்பு நிலை 65ஆவது நாளாகவும் தொடர்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
மார்க்கெட்டுகளும், இதர வணிக நிறுவனங்களும் தொடர்ந்து மூடியே இருக்கின்றன. பொதுப் போக்குவரத்துகளும் அதிகமான அளவிற்கு இயங்கவில்லை என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தனியார் வாகனங்களும், சில தனியார் டாக்சிகளும் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயங்குவதாகவும், சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைச் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
தரைவழித் தொலைபேசி சேவைகள் மீண்டும் அளிக்கப்பட்டிருக்கிற அதே சமயத்தில், மொபைல் போன்கள் இன்னமும் செயல்படவில்லை. இணைய சேவை, ஆகஸ்ட் 5 துண்டிக்கப்பட்டது, தொடர்கிறது.
பிரிவினை கோரும் அரசியல்வாதிகளில் அநேகமாக அனைத்து உயர்மட்டத் தலைவர்களும், தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள அதே சமயத்தில், முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் அல்லது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அரசாங்கம், தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அடைத்து வைத்திருக்கிறது.
(பிடிஐ)