திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

சேலம் அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று....

சேலம்:
சேலம் மாவட்டம் மேல்வல்லம் பகுதியை சேர்ந்தவர் மாணவி ரஞ்சிதா. இவர் பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தும்மல் இருந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை (ஜன.20) செய்துகொண்டார்.
இந்நிலையில் வியாழனன்று(ஜன.21) மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவி விடுதியில் தங்கியிருந்ததால், மற்ற மாணவிகளும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தொற்று உறுதியான மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

;