அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வெளியீடான ‘மகளிர் சிந்தனை’ மாத இதழ்கள் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு பொதுப்பயன் பாட்டு ஆய்வுத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
தெற்காசிய திறந்தவெளி மின்னணு காப்பகத்தின் (South Asia Open Archives) தளத்தில் https://www.jstor.org/action/doBasicSearch?Query=Maka%E1%B8%B7ir+cinta%E1%B9%89ai&so=rel என்ற இணைய சுட்டியில், ‘மகளிர் சிந்தனை’ மாத இதழ் வெளியான காலத்தில் இருந்து 2022 ஆண்டு வரை யிலான இதழ்களின் டிஜிட்டல் கோப்பு களைக் காணலாம். ‘மகளிர் சிந்தனை’ இதழ்களின் டிஜிட்டல் வடிவத்தை வாசிக்க லாம்; பதிவிறக்கம் செய்து ஆய்வுக்காக பயன்படுத்தலாம்.
சென்னை ரோஜா முத்தையா நூல கம் மேற்கொண்ட இந்தப் பணியை சிபிஐ (எம்) மாநிலக்குழு அலுவலகத்தின் சிபிஐ (எம்) கருவூலம் இந்தப் பணிகளை ஒருங்கி ணைத்தது. இத்தகவலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.