tamilnadu

பல்கலைக்கழக துணை வேந்தர் காலிப் பணியிடம் 5 ஆக அதிகரிப்பு

சென்னை, ஆக. 10 - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் சனிக்கிழமை யுடன் (ஆக.10) முடிவடைவதால் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பொறுப்பை உயர்கல்வி செயலா ளர் தலைமையில் அமைக்க ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்து இருக்கிறது.

\ஏற்கெனவே சென்னை பல் கலைக்கழகம், மதுரை காமரா சர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தற்போது அண்ணா  பல்கலைக்கழக துணைவேந் தர் பதவிக் காலம் நிறைவு  பெறுவதால், பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர் காலி யிடங்கள் 5 ஆக அதிகரிக்கிறது.

பொதுவாக துணைவேந் தர் பதவிக் காலம் நிறைவு பெற்றதும், இந்த பல்கலைக்கழ கத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாகக் குழு அமைக்கப்படும். அந்த வகையில் அண்ணா பல் கலைக்கழகத்தை நிர்வகிப்ப தற்கான நிர்வாகக் குழு தொ டர்பான அறிவிப்பு மிக விரைவாக வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு கள் அதிகளவில் இருக்கிறது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல் ராஜூவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

துணைவேந்தர் தேர்ந்தெ டுப்பதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறி வருகிறார். ஆனால், அதனை ஏற்க முடியாது என்று தமிழக அரசு கூறி விட்டது. இந்த பிரச்சனை காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.