tamilnadu

ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் இது!

ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் இது!

சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு

சென்னை, மே 10 - ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்படும் போரால் விலைவாசி உய ரும் என்று சிஐடியு மாநிலத்  தலைவர் அ.சவுந்தரராசன்  எச்சரித்துள்ளார். பாசிசத்தை செஞ்சேனை வீழ்த்தியதன் 80வது ஆண்டு தினமான வெள்ளியன்று (மே 9) சிந்தாதிரிப்பேட்டையில் பாசிச எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் அ.சவுந்த ரராசன் பேசியதன் ஒரு பகுதி வருமாறு: பஹல்காம் தாக்குதல் நடந்ததும் இஸ்லாமியர்க ளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இந்த தாக்குதலை கண்டித்து காஷ்மீர் மக்கள் முழு கடையடைப்பை நடத்தி, தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இந்தப் போரால், இருநாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் பாதிக்கப்படு வார்கள். கார்ப்பரேட்டுகள் கொழுப்பார்கள் என்கிறது பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி. போரால் விலைவாசி உயரும். அதனை எதிர்த்து கேட்டால் தேச விரோதி என்பார்கள். தற்போது நடைபெறுகிற இந்தப்போர் இந்தியா, பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி இருநாட்டு ஏழை, எளிய மக்களை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் முயற்சிப்பார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிந்த பிறகு, பிரச்சனைகள் எழும்போது ராணுவ, அதிகாரிகள் மட்டத்தில் பேசுவார்கள். ஆனால், பாஜக ஆட்சி யில் ஆட்சியாளர்கள் பேசு கிறார்கள். இதனால் பிரச்சனை தீராது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, தாக்குதலுக்கு தொடர்பில்லாத மக்களை பாதிக்கும் வகையில் தண்ணீரை நிறுத்துவது ஒரு சமூகத்திற்கு எதிரானது. இத்தகைய உரிமை யாருக்கும் கிடையாது. இஸ்ரேல் 52ஆயிரம் பேரை கொன்றுள்ளது. முதலாளிகள் அந்நாட்டுடன் வியாபாரத்தை நிறுத்தி விட்டார்களா? இலங்கையின் ஆளும் வர்க்கம் மக்களை, தமிழன், முஸ்லிம், வடக்கு, கிழக்கு என பிரித்து எதிரியை கட்ட மைத்து ஆட்சி நடத்தி யது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி யில் சிக்கியது. அதனை எதிர்த்த மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. மே தினத்தில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி, மதம், இனம், மொழி வேற்றுமைக்கு இடம் இல்லை என்றார். இந்த நிலை இந்தியாவில் வர வேண்டுமென்றால், இடது சாரி இயக்கங்கள் ஒன்றி ணைய வேண்டும், தொழி லாளி வர்க்கத்தை அணி திரட்ட வேண்டும். இந்நிகழ்விற்கு கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முரு கேஷ் தலைமை தாங்கி னார். மூத்த தலைவர் பி.டி.ராஜன் செங்கொடியை ஏற்றி வைக்க, மூத்த தலைவர் எம்.சந்திரன் பாசிச எதிர்ப்பு கண்காட்சியை திறந்து வைத்தார். சேப்பாக்கம், திருவல்லிகேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி வரவேற்க, மாவட்ட செய லாளர் ஜி.செல்வா, சிபிஐ மாநிலக்குழு உறுப்பி னர் த.லெனின், சிபிஐ (எம்எல்) மாநில நிலைக்  குழு உறுப்பினர் சொ. இரணியப்பன் ஆகியோர் பேசினர். கிளைச் செய லாளர் எஸ்.குணா நன்றி கூறினார்.