வேலூர், ஆக.28- குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா கிராமத் துக்குச் செல்லும் வழியில் ஒற்றை யானை வாகனங் களை வழிமறிப்பதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா கிரா மத்துக்கு, பலமநேர் சாலையி லிருந்து பிரிந்து 10 கி.மீ தூரம் வனப்பகுதியில் செல்ல வேண்டும். வழியில் மூங்கில் காடு எனும் பகுதியில் ஒற்றை யானை கடந்த சில நாள்க ளாக முகாமிட்டுள்ளதாம். அந்த யானை வனப்பகுதி யிலிருந்து சாலையைக் கடக்கும் நேரங்களில் அவ்வழியே செல்லும் வாக னங்களை வழி மறிக்கிறது. மோர்தானா கிராமத்தி லிருந்து குடியாத்தம் நக ருக்கு தோல் தொழிற் சாலைக்கு தொழிலாளர் களை ஏற்றி வந்த வேனை அந்த யானை வழிமறித்தது. பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது. “ஜங்காலபல்லியைச் சேர்ந்த முருகவேல்(40) என் பவரின் நிலத்தில் பயிரிடப் பட்டுள்ள மாட்டுத் தீவனம், பூந்தோட்டத்தை அந்த யானை மிதித்து சேதப்படுத்தி யுள்ளது. அந்த ஒற்றை யானையை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.