தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
சென்னை தலைமை செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.17) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டிய ளித்தார். அப்போது, “தொழில்துறைக்கான மிக முக்கிய கொள்கைக்கான அனுமதி வழங்கப்பட்டது. காரணம், பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி யில் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு. அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். புதிய துறைகளில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, விண் வெளித்துறையில் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை’2025க்கு அமைச்சரவைக் கூட்டத் தில் ஒப்புதல் வழங்கப் பட்டது”என்றார். நமது இலக்கு நமது கவனம் முழுவதும் உற்பத்தி துறையில் இருக்கும். ஆனால், விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய இலக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு முதலீடு களை ஈர்ப்பதில். மேலும், குறைந்த பட்சம் 10 ஆயி ரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உரு வாக்குவது. விண்வெளித் துறைக்கு தகுதியான, திறமைவாய்ந்த ஆட்களை உருவாக்குதல் என்று மூன்று இலக்குகளுடன் சேமிப்பு மற்றும் சேவை களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறி வுறுத்தியதன் அடிப்படை யில் அமைச்சரவை கூட்ட த்தில் அனுமதி கிடைத்து ள்ளது என்றும் அமைச்சர் கூறினார். உத்வேகம் சர்வதேச அளவில் விண்வெளி துறையில் உள்ள போட்டிகளுக்கு தமிழ்நாட்டின் இந்த முயற்சிக்கு தமிழ்நாட்டின் பாய்ச்சலுக்கு உத்வேக த்தை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சியில்,மிக குறைந்த முதலீடு ரூ.25 கோடியில் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற நமது கொள்கை முடிவு இளம் தலைமுறை முத லீட்டாளர்களுக்கும் பெரும் ஊக்கம் கொடுக்கிறது. மேலும், ரூ.300 கோடி முதலீட்டில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ஊதிய மானியம் முதல் ஆண்டில் 30 விழுக்காடு இரண்டாம் ஆண்டில் 10விழுக்காடு, மூன்றாம் ஆண்டில் 10 விழுக்காடு வழங்கப்படும் என்றும் நமது விண்வெளி கொள்கையில் அறிவிக்கப்படுகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முதலீட்டார்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள். இது தென் தமிழகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பிற மாவட்டங்களிலும் விண்வெளி சம்பந்தமான நிறுவனங்கள் துவங்கப் படும் என்றும் அவர் தெரி வித்தார்.