tamilnadu

img

கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழகத்தில் ஜூன் 10-இல் பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.