செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

விழுப்புரம், ஏப். 6-விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் து.ரவிக்குமாருக்கு வாக்கு சேகரிக்கும் பொதுக் கூட்டம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி தலைமையில் விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கே.எஸ்.மஸ்தான், தெற்கு ஆ.அங்கையற்கன்னி, மாவட்ட அவைத் தலைவர் கு.ராதாமணி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகரச் செயலாளர்கள் விழுப்புரம் சக்கரை, திண்டிவனம் கபிலன் ஆகியோர் வரவேற்றனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழுப்புரம் மக்களவைத் தனி தொகுதியில் போட்டியிடும் து.ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்.கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் வடக்கு என்.சுப்பிரமணியன், தெற்கு டி.ஏழுமலை, விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மத்தி ஆர்.டி.வி.சீனுவாசகுமார்,பி.எஸ்.ஜெயகணேஷ், ஆர்.பி.ரமேஷ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏவி.சரவணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முஸ்தாகிதின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;