சென்னை, ஆக. 30 - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழ கத்தில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவி கள் பலருக்கு பல்கலைக்கழக இணை பதி வாளர் மோகன் பாலியல் தொல்லை கொடு த்ததாக பல்கலைக்கழக பெண்கள் பாது காப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகத்தில் இணை பதிவாளராக செயல்பட்டு வருபவர் கே. மோகன். இவர் இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவிகள் பலரிடம் தகாத வார்த்தைகளில் பேசியும், பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
பல்கலைக்கழக இணைப் பதிவாளர் கே. மோகன் அளிக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பல்கலைக்கழக பெண்கள் பாது காப்பு ஆணையத்தில் புகார் அளிப் பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இணைப் பதிவாளர் மோகனிடம் விசாரணை நடைபெற உள்ளது.

மேலும், பல்கலைக்கழக இணை பதிவா ளர் மோகனுக்கு ஆதரவாக, சிண்டிகேட் குழு உறுப்பினர் நடேசன் உள்பட பல அதிகாரி கள் செயல்படுவதாகவும் மாணவிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை உரிய கவனம் செலுத்தி ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவிகளிடம் அத்துமீறிய பல்கலைக்கழக இணைப் பதிவாளர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண் ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.