tamilnadu

பஞ்சாலைகளை மூடினால் புதுச்சேரி ஸ்தம்பிக்கும்

வாலிபர் சங்கம் எச்சரிக்கை

புதுச்சேரி,ஜன.24- புதுச்சேரி பஞ்சாலைகள் மூடுவது  இளைஞர்கள் விரோத செயல் என்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுச்சேரி பஞ்சாலைகள் தரமான  துணிகளை தயாரித்து உள்நாடு,  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. லாபகரமாகவும் இயங்கி வந்தது. கடந்த 10 ஆண்டு களாக அரசின் பாராமுகத்தாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் கடும் நெருக்கடிகளை யும், நட்டத்தையும் சந்தித்து வருகிறது.  இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வு காண பல்வேறு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்த போதிலும் அதற்கான நிதி ஒதுக்காமல், ஆலை களை மூடும் அளவுக்கு சென்றுள்ளது . புதுச்சேரியில் வேலைவாய்ப் பற்ற இளைஞர்களை மேலும் மேலும்  பழிவாங்கும் செயல் என்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு தெரி வித்துள்ளது. சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்து,செயலாளர் சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கடந்த 4 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் வாரம்தோறும் பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று தூர்வாரும் பணியையும், ஸ்வச் பாரத், களஆய்வு மேற்கொண்டு வரும் புதுச்சேரி துணை நிலை ஆளு நர் கிரண்பேடி , மாநில மக்கள் நலன் சார்ந்த அல்லது இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சிறு துரும்பை கூட நகர்த்த வில்லை.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் அரசின் வாக்குறுதியான வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை, அரசு  துறைகளில் காலியாக உள்ள 8500  பணியிடங்களை நிரப்பவில்லை,  ஐடி மற்றும் ஜவுளி பூங்கா உருவாக்கப்  படும் என்ற அறிவிப்புகள் அனைத்தும்  எழுத்தளவிலேயே உள்ளது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க கலவை கல்லூரி, வ.உ.சி. பள்ளி கட்டி டங்களை பழமை மாறாமல் புணர மைக்க நிதி ஒதுக்கவில்லை மறுபுறம்  அமுதசுரபி பெட்ரோல் பங்குகளை இயக்காமல் தனியாரிடம் ஒப்ப டைக்கும் முயற்சி, லிங்கா ரெட்டி பாளையம் சர்க்கரை ஆலையை இயக்க முடியாமல் இருப்பது என அனைத்தும் ஆளும் காங்கிரஸ் அர சின் கையாலாகாத தனத்தையும் மக்கள் விரோத போக்கையும் காட்டு கிறது.

தனக்குத்தான் அதிகாரம் உள்ளது  என்று போட்டி போட்டுக்கொள்ளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், முதல்வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவ தில் எந்த முனைப்பும் காட்டாமல் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து  வேலை வாய்ப்பற்ற இளைஞர் களை அதிகப்படுத்தி சமூக குற்றங்களை அதிகரிக்க, அமைதி யற்ற மாநிலமாக மாற்றும் மோச மான  நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலை களை நவீனப்படுத்த சில நூறு கோடி  ரூபாய் ஒதுக்கினாலே 15,000 -க்கும்  மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடி யாகவும், 10,000- க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மறை முகமாக வும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடி யுமென்பது எங்களது நிலைப்பாடு. எனவே, பஞ்சாலையை மூடும் நட வடிக்கையை மத்திய-மாநில அரசு கள் உடனடியாக கைவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள பஞ்சாலை களை நவீனப்படுத்தி தொடர்ந்து இயங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி ஜவுளி பூங்காவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்  களை திரட்டி புதுச்சேரி மாநிலம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு தொடர் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

;