tamilnadu

அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி

சென்னை, ஆக. 2- எழும்பூர் அரசு அருங்கா ட்சியக வளாகத்தில்  சனிக்கிழமை முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் ‘சென்னை யில் ஓவிய சந்தை,’  என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த ஓவிய சந்தையில் தமிழகத்தை சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகள் விற்பனைக் க்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட வுள்ளது. இதனை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் காலை 11 மணியளவில் துவங்கி வைக்கிறார். சென்னையில் முதன் முறை யாக மிகப் பிரமாண்டமாக நடைபெறும் இந்த ஓவிய சந்தையை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கலை படைப்பு களை வாங்கி கொள்ளலாம்.