வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

ஜனவரி 19-ல் நிறைவு பெறுகிறது வடகிழக்கு பருவமழை....

சென்னை:
ஜனவரி 19ஆம் தேதியோடு தென் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்.கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாமக்கல், குமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;