நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பாடியநல்லூர் சிவந்தி ஆதித்தன் நகரில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் சி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.இதில் மாவட்டத் தலைவர் டி.மதன், மாவட்டச் செயலாளர் எஸ். தேவேந்திரன், பொருளாளர் கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் லோகநாதன், பொன்னேரி பகுதி செயலாளர் சதீஷ் உட்பட பலர் பேசினர்.