வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்

சென்னை:
பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பா.ஜ.க.வில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுப்பவர்களை தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா. கோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு, 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் இவர்மீதுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத் தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. வடசென்னையை கலக்கிய கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந் தார். கல்வெட்டு ரவி மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. 6 படுகொலை வழக்குகளில் தொடர்புடையவர் அந்த ரவி. இதேபோல் சென்னை சூர்யா என்ற ரவுடியும் பாஜகவில் இணைந்தார்.வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத் தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகிவிட்டார். அவர் மீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல் புதுச்சேரியை மிரளவைத்துக் கொண்டிருக்கும் பெண் தாதா எழிலரசியும் பாஜகவில் இணைந்துள் ளார். புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் படுகொலை வழக் கில் முக்கிய குற்றவாளி எழிலரசிதான். சமூக சேவகி என்ற அடையாளத்துடன் வலம் வரும் தாதா எழிலரசி இப்போது பாஜக பிரமுகராகி விட்டார். புதுச்சேரி ரவுடிகளான சோழன், விக்கி, பாம்வேலு ஆகியோர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்து பதவிகளைப் பெற்றுள்ளனர். .தி.மு.க. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை மற்றும் மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கொலைகளில் சம்பந் தப்பட்ட நபர்கள் பாஜகவில் இணைந்தனர். எந்த நோக்கத்தில் சேர்கிறார்கள்?

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே! தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.

;