சென்னை, ஜூன் 16- இந்து முன்னணியைச் சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்புவதை முற்றிலும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்ச ரித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்து முன்னணி என்கிற பெய ரில், கட்டப்பஞ்சாயத்து செய்வ தையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் காடேஸ்வரா சுப்பிர மணியம் என்பவர், நெல்லை சாதி மறுப்புத் திருமணம் குறித்து அவதூ றான ஓர் அறிக்கையை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கை மொத் தமுமே அபத்தக் குப்பையாக இருக்கிறது. “இந்து முன்னணி” என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள அவர், ஓர் ‘இந்து’ ஆணுக்கும் ஓர் ‘இந்து’ பெண்ணுக்கும் நடைபெற்ற சாதி மறுப்பு காதல் திருமணத்தை சரி என்று சொல்ல இயலாதவராக, வெட்கங்கெட்ட முறையில் வெறுப்பை வெளியிட்டு விஷம் கக்கியுள்ளார்.
காரணம், பட்டியலின சமூகங்கள் மீது அவருக்கு இருக்கும் சாதிய ஆதிக்க வெறி உணர்வுதான். இவர் களைப் போன்றவர்கள் தங்கள் அமைப்பை இந்து முன்னணி என்று சொல்லிக் கொள்வதே ஒரு பம்மாத்துதான். சாதி ஆணவக் கொலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலை யில், அதற்கு வாய்ப்பு இருக்கும் ஒரு சூழலில், திருமணம் செய்து கொண்டோரை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கையை காடேஸ் வரா சுப்பிரமணியம், “கட்டப்பஞ்சா யத்து” என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற் குள் நுழைந்தவர்களின் கைகளில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள் கிடைத்திருந் தால், இருவரின் உயிரும் பறிக்கப் பட்டிருக்கும் ஆபத்து இருந்ததை அவர் மறுக்க முடியுமா? அப்படி நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அருகில் இருந்து பார்த்தவர் போல, அப்பெண்ணின் உறவினர் கள் மட்டும் தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்ததாகச் சொல்கிறார்.
அங்கு வந்த ஜெயக்குமார் என்கிற கூலிப் படை நபருக்கும் பெண் வீட்டின ருக்கும் ஏதேனும் உறவு முறை உண்டா? ஜெயக்குமார் கத்தியோடு வந்தது, சமரசம் பேசுவதற்காகவா? பிபின் என்ற காவலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம், பெண்ணையும் பையனையும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கா தீர்கள்; எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டதையும், அந்த நபர் பெண் வீட்டாரின் வட்டித் தொழி லோடு சம்பந்தப்பட்டவர் என்பதை யும் “கட்டப்பஞ்சாயத்து” காடேஸ் வரா சுப்பிரமணியம் மறுக்க முடி யுமா? எனவே, வெவ்வேறு சமூ கங்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொள்ளமாட்டார்களா; அதில் புகுந்து ஏதேனும் காசு பார்க்க முடி யாதா என்ற நப்பாசையுடன் காடேஸ் வரா சுப்பிரமணியம் போன்ற விஷ மிகள் வெறிபிடித்து திரிகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியையும் தமிழ் நாடு அரசாங்கத்தையும் இடை யிடையே சேர்த்து அறிக்கை என்கிற பெயரில் முற்றிலும் அவதூறை வெளியிட்டிருக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம், இத்தகைய செயலை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.
இந்து முன்னணிக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற் கும் திராணி இருந்தால், சாதி மறுப்பு திருமணம், தீண்டாமைக் கொடுமை, சாதி ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன வென்று தெரிவித்துவிட்டு, பிறகு கருத்துச் சொல்ல வரட்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.