tamilnadu

img

இன்று கலைஞரின் 101-வது பிறந்த நாள்

சென்னை, ஜூன் 2- மறைந்த முன்னாள் முதல் வர் கருணாநிதி 101 ஆவது  பிறந்த நாளான  இன்று, மெரினா  கடற்கரையில் உள்ள நினைவி டத்தில் முதல்வர் மு.க.ஸ்டா லின் மரியாதை செலுத்துகிறார். 

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்  வர் கருணாநிதி 101 ஆவது பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி  திமுக சார்பில் கொண்டாடப்  படுகிறது. அக்கட்சியின் தலை வரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் காலை 9 மணிக்கு சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் 9.15 மணிக்கு  சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக் கும், 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரதும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

;