செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

கருக்கலைப்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்துவது அவசியம்: நீதிமன்றம்

சென்னை,ஏப்.25-கருக்கலைப்புக்கான காலத்தை 20-ல் இருந்து 24 வாரங் களாக அதிகரிப்பது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றப் பதிவாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருவின் குறைபாடுகள் 20 வாரத்திற்குப் பின்னரே தெரியவரும் என்பதால், அப்போது கலைக்க அனுமதிக்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.இதை 24 வாரங்களாக நீட்டிக்கும் பரிந்துரை அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பாலியல் வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் கருக் கலைப்புக்கான கால அளவை 24 வாரங்கள் ஆக உயர்த்துவது பெருமளவில் பயன் அளிக்கும் என்றனர். இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;