சென்னை, ஜூன் 25- சாதி மறுப்புத் திருமணம் தொடர் பான அனைத்து வகை குற்றங்களி லும் வழக்குகளை விரைந்து நடத் திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் கள் (Special Public Prosecutors) நியமிக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்ற குற்றங்களில் இனி மேல் காவல் ஆய்வாளருக்குப் பதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை அலுவலராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.
நெல்லையில் சிபிஎம் அலுவல கம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப் பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத் திற்கு பதில் அளித்து பேசுகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி யதாவது:
“திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் ஜூன் 13 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்க ளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர் பான புகைப்படம் முகநூல் பக்கத் திலே பதிவிடப்பட்டதாகத் தெரி கிறது.
இதனையடுத்து, மணப்பெண் ணின் குடும்பத்தினர் கடந்த ஜூன் 14 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
14 பேர் கைது
இச்சம்பவம் தொடர்பாக, அக் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெரு மாள் புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் ஏழு பேர் மட்டும் பிணை யில் விடுவிக்கப்பட்டனர். ஆண்கள் ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்ட னர்.
சாதிய வன்கொடுமை!
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சாதிய வன் கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந் தது. இதையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட் டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட் டது. தொடர்ந்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக நீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திமுக, பெண் கல்வி மற்றும் சம உரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பக் காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமா கும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிக்கும் திமுக!
இந்த அரசு பொறுப்பேற்றதிலி ருந்து இதுபோன்ற பிற்போக்குத் தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்ற வாளிகளுக்கு முறையான தண் டனை வாங்கித் தரப்படுகிறது. இதன் காரணமாக, இது போன்ற சம்ப வங்கள் பதிவு செய்யப்படும் பொழுது வழக்குகளில் குற்றவாளி களுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது.
நடைமுறையில் உள்ள சட்டங்கள் மூலமே தண்டனை பெற்றுத் தர முடியும்
உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென ஒரு சிறப்புச் சட்டத் தைக் கொண்டு வருவதை விட, நடைமுறையிலுள்ள சட்டப் பிரிவு கள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்ட னைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேக மான நடவடிக்கை எடுத்து குற்ற வாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. சமீபத்திய வழக்குகள் மாற்றம் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில் கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் காவல் சரகம், புதுக்கூரைப்பேட்டையில் 8.7.2003 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கடந்த 29.2.2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல, 2015ஆம் ஆண் டில், நாமக்கல் மாவட்டத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப் பட்ட வழக்கு முறையாக கண்கா ணிக்கப்பட்டு, வேகப்படுத்தப் பட்டு, இம்மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் 8.3.2022 அன்று வழங்கிய தீர்ப்பு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யால் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல, கடலூர் மாவட் டத்தில் ஆதிவராகநத்தத்தைச் சேர்ந்த சீதா என்பவர் 15.6.2014 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 16.7.2014 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு வேகப்படுத்தி 29.2. 2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது.
எனவேதான் இதுபோன்ற குற் றங்களின் வழக்குகளை முறை யாக நடத்தி குற்றவாளிகளை சட் டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது என்பது புதிய சட் டங்களை இயற்றுவதைவிட சரியானதாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது.
பெண் கல்வி உயரும்போது...
அதேநேரம் இந்தக் குற்றங் களை வெறும் குற்றவியல் நிகழ் வாக மட்டும் பார்க்காமல், இதன் சமூகப் பொருளாதாரப் பின்னணி காரணங்களை வைத்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, குற்றவாளிகளுக்கு தண்டனை யைப் பெற்றுத் தருவது ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்தில் பொரு ளாதார வளர்ச்சியின் மூலமாக பெண் கல்வி உயரும் பொழுது, கல்வி மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும்போது இதுபோன்ற குற்றவாளிகள் எண் ணிக்கை வெகுவாக குறையும்.
அதே போன்று ஒரு சமுதா யத்தை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் காரணமாகவே நாம் நடை முறைப்படுத்தும் புதிய திட்டங்கள் அனைத்தும் பெண்களின் வாழ்க் கையை வாழ்க்கைத் தரத்தை கல்வி யை அவர்களது உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன் னரிமை அளித்து வருகிறோம்.
இலக்கு வெகுதூரம் இல்லை...
இருப்பினும், தற்போது நமது இலக்கு சற்று தொலைவில் இருப்ப தாகத் தோன்றினாலும், நடை முறையில் இன்று சந்தித்து வரும் சமூகரீதியிலான பிரச்சனைகளை, அதன் விளைவுகளை இங்கே பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்ட தைப்போல உடனடியாக எதிர் கொள்ளவும், அதற்கொரு தனி முக்கியத்துவம் அளிக்கும் வித மாகவும், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகைக் குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப் பில் பிரத்யேகமாக சிறப்பு குற்ற வியல் வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) நியமிக்கப் படுவார்கள்.
தற்போது இதுபோன்ற குற்றங் களில் எல்லாம், குற்றவியல் நடை முறைச் சட்டத்தின்படி காவல் ஆய் வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார். ஆனால், இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத் தும் வகையிலும், வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவல ராக காவல் துணைக் கண்காணிப் பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமல்ல, உறுப்பினர் கள் பேசும்போது குறிப்பிட்டதைப் போல, இக்குற்றங்களைக் குறைக் கும் வகையில் மாவட்ட அளவி லான குழுக்கள், அவை அமைக் கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ் வாறு இருந்தன என்பதைப் பற்றி யெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து, அது குறித்தும் தேவையான முடிவு கள் எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.