சென்னை:
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இதே போன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 9 ஆஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில், சங்க கிரியில்8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரியில் 7 செ.மீட்டரும், ஆம்பூர், நாமக்கலில் 5 செ.மீட்டரும் மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.