tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

கீழமாஞ்சேரி கிராமத்துக்கு நல்ல குடிநீர் பாபநாசம் எம்எல்ஏ முயற்சிக்குப் பலன்

பாபநாசம், டிச.21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி  கிராமத்தில் குடிநீர் மாசடைந்த நிலையில் உள்ளதாக வும், பாதுகாப்பான குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டு மென்றும் அந்த கிராம மக்கள் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் முருகா னந்தத்தை சந்தித்து கீழமாஞ்சேரி கிராமத்திற்கு பாது காப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆய்வுக் கூடத்தில், கீழ மாஞ்சேரி கிராமத்தில் விநியோகம் செய்யப்படுகிற தண்ணீர் மாதிரி ஆய்வு செய்யப்பட்டு குடிநீர் மாசடைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப் பட்டது.  தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து புதிதாக குழாய்கள் பதித்து, கீழ மாஞ்சேரி கிராமத்தில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், குடிநீர் சேமிக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.  மேற்கண்ட தகவலை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன், பாபநாசம் எம்.எல்.ஏ  ஜவாஹிருல்லாவிற்கு அனுப்பியுள்ள பதிலில் தெரி வித்துள்ளார்.

டிச.27-இல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.21- அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  டிச.27 அன்று காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சிய ரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசா யிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க  பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை  தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி தெரிவித்துள்ளார்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

பாபநாசம், டிச.21 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில் எம்ஜி என்ஆர்இ ஜிஎஸ் திட்டத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.  பட்டுக்குடி சமுதாயக் கூடத்தில் நடந்த இக்கூட்டத்தில், கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் எம்ஜிஎன்ஆர்இ ஜிஎஸ்  திட்டத்தில் நடைபெற்ற மெட்டீரியல் பணிகள் மற்றும்  மனித சக்தி நாட்களுக்காக செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட தணிக்கை அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல்  பெறப்பட்டது. கடந்த 2016-17 முதல் 2020-21 வரை கட்டப்பட்ட பிஎம்ஏஒய் வீடுகள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டது. மேலும் இந்தத் திட்டங்கள் தொடர்பாக  பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்கள், கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு கோவிந்த நாட்டுச்சேரி  ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். 

திருக்குறள் போட்டிகள்

புதுக்கோட்டை, டிச.21 - கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப் பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வெள்ளி  விழாவாக கொண்டாடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி-வினா போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் டிச.24 அன்று காலை 10.30 மணிக்கு  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச.26 அன்று காலை  10.30 மணிக்கு பேச்சுப்போட்டியும், டிச.28 காலை 10.30 மணிக்கு வினாடி-வினா போட்டியும் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட் பட்ட குழந்தைகளும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும் கலந்து கொள்ளலாம். திருக்குறளின் ஏதேனும் ஐந்து அதிகாரங்களை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பொருளுணர்ந்து, உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும். பேச்சுப்  போட்டியில் கலந்து கொள்வோர் “நன்றிக்கு வித்தாகும்  நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 9965748300 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்ய லாம். கூடுதல் விவரங்களுக்கு 9894052850 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். பெயர்களை டிச.21 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதம் டிச.31 அன்று நடைபெற  உள்ள நிறைவு விழாவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு  இலவச பயிற்சி

கரூர், டிச.21 - கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப் I, II, IV, TRB, TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்று நர்களாக பணியாற்ற விரும்புவோர் டிசம்பர் 31, 2024-க்குள்  தங்கள் சுயவிவரத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் விவ ரங்களுக்கு 94990-55912 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.

மரம்  வளர்ப்போம்! 
சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!

பாலியல் வன்முறைக்கு எதிராக பிரச்சாரம்-பேரணி

அரியலூர், டிச.21- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.  இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  மகளிர் சுய உதவிக்குழுவினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பேரணியானது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி  அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர்  நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரிய லூர் அண்ணா சிலை அருகில் நிறைவடைந் தது.