ஓய்வூதியம் பறிப்பதை கண்டித்து மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்டம்
சென்னை, மே 13 - ஓய்வூதியத்தை பறிக்கும் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து செவ்வா யன்று (மே 13) மாநிலம் முழுவதும் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன்களை வழங்க வேண்டும் என்ன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவல கம் முன்பு சென்னை மற்றும் காஞ்சி புரம் மண்டல கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன் கூறியதாவது: ஓய்வூதியர்களில் ஒரு பிரிவின ருக்கு 8வது ஊதியக்குழு பரிந்துரை கள் பொருந்தும். மற்றொரு பிரி வினருக்கு பொருந்தாது என்று ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இருப்பிரிவாக ஓய்வூதியம் தரக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 1982ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் ஓய்வூதியம் தரப்படு கிறது. இதற்குமாறாக செய்யப்பட் டுள்ள சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். மின்வாரியம் சீரமைப்பு என்ற பெய ரில் பல கம்பெனிகளாக பிரித்துள் ளது. இதற்காக தொழிற்சங்கங்களிடம் வாரியம் செய்துள்ள ஒப்பந்தத்தில், எதிர்காலத்தில் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. மாறாக, அந்தந்த கம்பெனி களின் நிதிநிலைமைக்கு ஏற்ப ஓய்வூதி யம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு ள்ளது. இதனை மாற்றி அரசு உத்தர வாதம் வழங்க வேண்டும். ஒரு ஓய்வூதியம் 4 வருடத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், அரசு உத்தர வுக்கு மாறாக, காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் கோரும் தொகையை வழங்க மறுக்கின்றன. எனவே, இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஊனமுற்றோர், விதவை, விவாகரத் தானவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப் பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை மறுக்கும் வகையில் வாரியம் விதித் துள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு கிராஜூவிட்டி ரூ.25 லட்சமாக உயர்த்தி யுள்ள நிலையில், வாரிய ஊழியர் களுக்கும் உயர்த்த வேண்டும், ஈமச் சடங்கு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வாரிய தலை மையகத்தை முற்றுகையிட்டு காத்தி ருப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப்போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி தலைமை தாங்கினர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், நல அமைப்பின் மாநில பொருளாளர் ஏ.பழனி, துணைப்பொதுச் செயலா ளர் பாலசுப்பிரமணியம், மாநிலச் செய லாளர்கள் கணேசன், சம்பத்ராவ், மோகன், துணைத் தலைவர் நடரா ஜன் உள்ளிட்டோர் பேசினர்.