ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் சிதம்பரத்தில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் கற்பனை செல்வம், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் புவனகிரியில் ஒன்றியச் செயலாளர் சதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
***********
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆனந்து, செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், சீனுவாசன், சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், நடராஜான், அன்புமணி, ஜயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
***********
வேலூரில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி. ராமச்சந்திரன், எஸ்.டி.சங்கரி, ஏகலைவன், ஆர்.ரகுபதி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.சந்திரன், சி.ஞானசேகரன், ஸ்ரீராம், சி.எஸ்.மகாலிங்கம், திலிப்பன், தா.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
***********
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்பில் வழக்கறிஞர் ரஜினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
***********
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வாலிபர் சஙகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
***********
வளத்தியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் வட்டத் தலைவர் பா.வெங்கடபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பிரகாஷ், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் உதயகுமார், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், வாலிபர் சங்க செயலாளர் ஹரிஹர குமார், பொருளாளர் காண்டீபன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி வட்டச் செயலாளர் அண்ணாமலை, வாலிபர் சங்க நிர்வாகிகள் நாகராஜ், சக்தி, குமார், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.