வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.20-
தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

;