tamilnadu

img

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;