tamilnadu

img

தாய்ப்பால் விற்பனை: மாநிலம் முழுவதும் கண்காணிப்பு!

சென்னையில் சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்கப்படுகிறதா என கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு.

சென்னை மாதவரத்தில், சட்ட விரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் அடைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. 
இந்த நிலையில்,சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையாவை போலீசார் கைது செய்தனர். கடையிலிருந்த தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கும் சீல் வைத்தனர். இதை அடுத்து, மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்கப்படுகிறதா என கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு.
சென்னையில் 18 கண்காணிப்பு குழுக்களும், திருவள்ளூர் 17 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தாய்ப்பால் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்!

;