சென்னை, ஆக. 24 - மத விழாக்களை அரசு நடத்துவது கூடாது என்றும், அது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கே. பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தமது சமூகலைத்தளப் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அர சின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலை யை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறி யடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.