திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

தேசிய பார்வையற்றோர் இணைய தமிழ்நாடு நிர்வாகி ராமமூர்த்தி காலமானார்

சென்னை:
தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் ஜி.ராமமூர்த்தி (பார்வை மாற்றுத் திறனாளி) சென்னையில் நிமோனியா காய்ச்சல் நோயால் காலமானார். அவ ருக்கு வயது 61.  அவருக்கு பார்வை மாற்றுத்திறனாளி மனைவியும், மகனும் உள்ளனர். தேசிய பார்வையற்றோர் இணையத்தில் சுமார் 35 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகள் வகித்த ஜி.ராமமூர்த்தி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.  பார்வையற்றோரின் நலன் களுக்காகவும், உரிமைகளுக்காகவும், வாழ் நாள் முழுவதும் பணியாற்றியும், போராடியும் வந்த அவரின் இழப்பு, பார்வையற்றோர் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது உடல் கடந்த செவ்வாயன்று பெசன்ட்நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல்
தேசிய பார்வையற்றோர் இணையத் தின் தமிழ்நாடு கிளையின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமமூர்த்தி  மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மகன் மற்றும்  அச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பா.ஜான்ஸிராணி மற்றும் பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் தங்களின் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

;