tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

நியாயவிலை கடைகளுக்கு  புதிய விற்பனை முனைய கருவி

 கடலூர், ஜூன்12-  கடலூர் வட்டத்திற்குட்பட்ட நியாய விலை கடை பணியாளர்களுக்கு  புதிய விற்பனை முனைய கருவியை பயன்படுத்துவது குறித்து  பயிற்சி அளிக்கப்பட்டது.

கைரேகையை பதிவு செய்து ரேசன் பொருட்கள் வாங்கும் முறை ஏற்கெனவே வழக்கத்தில் இருந்தது. அதில் வயதானவர்கள் கைரேகை பதிவாகாததால் அவர்கள் அலைகழிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக மின்னணு விற்பனை முனையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண் விழித்திரையை பதிவு செய்து கொண்டு பொருட்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், பொது விநியோக அதிகாரிகள்  சரண்யா, வேலாயுதம்,  விக்னேஷ் குமார்,  காளிதாஸ்,  ரம்யா,  வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண் காவலரிடம்  தகராறு

சென்னை, ஜூன் 12- சென்னையில் கஞ்சா போதையில் பெண் காவல ரிடம் அத்துமீறியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை செம்பியம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் மு.சுவாதி (24). இவர், மாதவரம் நெடுஞ்சாலையில் போக்கு வரத்தை சரி செய்யும் பணியில் செவ்வாயன்று ஈடுபட்டிருந்தார். அப்போது வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த கா.பிரவீண் (22) என்பவர் தனது ஆட்டோவை நிறுத்தினார். இதைப் பார்த்த சுவாதி, பிரவீணை அங்கி ருந்து ஆட்டோவை எடுத்துச் செல்லும்படி கூறி னார். ஆனால் கஞ்சா போதை யில் இருந்த அவர்  ஆபாச மாக பேசியுள்ளார். இது தொடர்பாக சுவாதி அளித்த புகாரின் அடிப்படையில் 3  பிரிவுகளின் கீழ் பிரவீண் கைது செய்யப்பட்டார்.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழு: திமுக அறிவிப்பு

சென்னை, ஜூன் 12-  ஜூலை 10 அன்று நடைபெறும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கு அமைச்சர் க. பொன்முடி, எஸ். ஜெகத்ரட்சன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், அமைச்சர்கள் கே.என். நேரு காணை மத்திய ஒன்றியம், எ.வ.வேலு விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம், அர.சக்கரபாணி காணை வடக்கு ஒன்றியம், தா.மோ. அன்பரசன் கோலியனூர் மேற்கு ஒன்றியம், எஸ்.எஸ். சிவசங்கர் விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம், சி.வி.கணேசன் விக்கிரவாண்டி பேரூர்,அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் மரு. ஆர். லட்சுமணன் காணை தெற்கு ஒன்றியத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்ளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று செயல்வீரர்கள் கூட்டம்

ஜூலை 14 அன்று மாலை விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக் குழுவினர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

பழுதாகி நின்ற லாரி மீது   பேருந்து மோதி 15 பேர் படுகாயம்

வேலூர், ஜூன் 12 - வேலூர்  கருகம்புத்தூர் அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், குடியாத்தத்தில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு செங்கல்பட்டு நோக்கி சென்ற லாரி பழுதாகி சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில் குடியாத்தத்திலிருந்து வேலூர் சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக  லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட பயணிகள் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தனியார் பேருந்துகள் வேகமாக இயக்கப்பட்டதாகவும். ஒருவரை ஒருவரை முந்திசெல்ல முயன்றதால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 பொன்னேரி கிளைச்சிறையில் நீதிபதி ஆய்வு 

திருவள்ளுர், ஜூன் 12- திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி கிளை சிறையில் புதனன்று (ஜூன் 12),  அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்  த. பிரபுசங்கர்,  செங்குன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,  மாவட்ட மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே.மோகன்,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.தீனதயாளன் ஆகியோர் உடன் உள்ளனர்.

;