tamilnadu

img

பாஜக நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

செங்கல்பட்டு அருகே ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் பாஜக நிர்வாகியைக் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன்பாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பிடிபட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடமிருந்து துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் வாங்கி கொடுத்ததாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.