tamilnadu

img

கோவை: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து  

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமார் என்பவருடன்  திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் வடுகபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே நேற்றிரவு சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க என்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கார் தீடிரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.    

இந்த காரில் பயணித்த இருவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர்.  

அதனைதொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.