tamilnadu

img

வக்பு திருத்த சட்டத்தை கைவிடக் கோரி திருப்பூரில் மாபெரும் கண்டன பேரணி

வக்பு திருத்த சட்டத்தை கைவிடக் கோரி திருப்பூரில் மாபெரும் கண்டன பேரணி

திருப்பூர், ஏப்.19 -  அநீதியான வக்பு திருத்த சட் டத்தை கொண்டு வந்த ஒன்றிய அர சைக் கண்டித்து வெள்ளியன்று அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்ட மைப்பினர் திருப்பூர் குமரன் நினைவ கம் முன்பிருந்து கருப்புப் பட்டை அணிந்து மாநகராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஒன்றிய பாஜக அரசு கொண்டு  வந்துள்ள வக்பு திருத்த சட்டம்  இஸ்லாமிய மக்களின் அடிப்படை அரசியல் அமைப்புச் சட்ட உரி மையைப் பறிப்பதாக உள்ளது. அவர் களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. எனவே இந்த சட்டத்தை கண்டித்து அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்ட மைப்பினர் வெள்ளியன்று மாபெரும்  இயக்கம் நடத்தினர். திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பிருந்து பேரணி துவங்கி யது. இதில், வஞ்சக நோக்கத்துடன் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பலூன்கள் மற்றும்  கண்டன பதாகைகளை கையில் ஏந்தி  ஊர்வலமாக சென்றனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்ட மைப்பு தலைவர் இப்ராஹீம் கலீல்  தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலா ளர் முகமது யாசர் வரவேற்றார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரீஸ் துவக்கி வைத் துப் பேசினார். திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில துணை பொதுச்செய லாளர் வன்னியரசு, தெற்கு சட்டமன்ற  உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந. தினேஷ்குமார், திமுக தெற்கு மாநகர  செயலாளர் டி.கே.டி மு.நாகராஜ், காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலை வர் கோபி, மதிமுக மாநகர் மாவட்டச்  செயலாளர் ஆர்.நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்,ரவிச்சந்திரன் ஆகியோர் ஒன் றிய அரசின் உள்நோக்கத்தை அம்ப லப்படுத்திப் பேசினர். இந்த பேரணி  மற்றும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.